09th September 2024 15:09:28 Hours
இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஏ.யு கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி ஐஜி அவர்கள், 11 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக 2024 செப்டம்பர் 06 அன்று பல்லேகலை 11 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பதவியேற்றார்.
புதிய தளபதிக்கு அவரது வருகையின் போது பிரதான நுழைவாயிலில் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, 10 வது கஜபா படையணி படையினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை பரிசீலனை செய்ய அவர் அழைக்கப்பட்டார்.
அதன்பிறகு, புதிய தளபதி தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
அதன்பிறகு, புதிய தளபதி அனைத்து அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துக்கொண்டதுடன், பிரகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் 11 வது காலாட் படைப்பிரிவின் சிப்பாய்கள் என அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.