08th September 2024 20:35:23 Hours
பிரிகேடியர் எல்கேடீ பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் விளையாட்டு பணிப்பகத்தின் 16வது பணிப்பாளராக 02 செப்டெம்பர் 2024 அன்று பனாகொட விளையாட்டு பணிப்பகத்தில் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
சிரேஷ்ட அதிகாரி புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இந்த நியமனத்திற்கு முன், அவர் இராணுவ தலைமையகத்தில் நலன்புரி பணிப்பக பணிப்பாளராக பணியாற்றினார்.
சம்பிரதாயங்களைத் தொடர்ந்து, பிரிகேடியர் எல்கேடீ பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பிரதான மாநாட்டு மண்டபத்தில் ஒரு விரிவான விளக்கமளிப்பு அமர்வில் கலந்து கொண்டார். பின்னர் அவர் இலங்கை இராணுவ விளையாட்டு அபிவிருத்தி கிராம விரிவுரை மண்டபத்தில் படையினருக்கு தனது பணியின் நோக்கம் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் தெளிவுபடுத்தி உரையாற்றினார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.