Header

Sri Lanka Army

Defender of the Nation

08th September 2024 20:07:44 Hours

“ராஜாலி சந்தேஷய” புத்தக வெளியீட்டு விழாவில் இராணுவ தளபதி

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்கள் எழுதிய ‘ராஜாலி சந்தேஷய’ எனும் புத்தக வெளியீட்டு விழாவில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்துகொண்டார்.

2579 கவிதைகளைக் கொண்ட இலங்கையின் இலக்கிய வரலாற்றில் மிக நீளமான காவ்யசந்தேஷயமான (கவிதைகளின் தொகுப்பு) ‘ராஜாலிசந்தேஷய’ 06 செப்டம்பர் 2024 அன்று நெலும்பொகுண திரையரங்கில் வெளியிடப்பட்டது.

இந்த காவியத் தொகுப்பு, எல்டிடிஈ பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் போரின் பிரதிபலிப்பாகவும், வரலாற்று நிகழ்வுகள் மற்றும் போரின் போது ஒரு இராணுவ அதிகாரியாக ஆசிரியரின் தனிப்பட்ட அனுபவங்களை ஒன்றாக இணைக்கிறது.

நூலாசிரியர் மற்றும் திருமதி சித்ராணி குணரத்ன அவர்கள் இலக்கியப் படைப்பின் முதற் பிரதியை வண. மகாசங்கத்தினருக்கு வழங்கி சிறப்பு வாய்ந்த கௌரவத்தைப் பெற்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்ன ஆகியோரின் துணைவியார்களான திருமதி லலி கொப்பேகடுவ மற்றும் திருமதி மானெல் விமலரத்ன ஆகியோருக்கும், அபிமன்சலவைச் சேர்ந்த அங்கவீனமுற்ற போர்வீரர்களுக்கும் புத்தகத்தின் பிரதி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேராசிரியர் பிரணீத் அபேசுந்தர மற்றும் வண. இந்துராகரே தம்மரதன தேரர் ஆகியோர் புதிதாக வெளியிடப்பட்ட படைப்பின் இலக்கிய முக்கியத்துவம் பற்றி ஆற்றிய நுண்ணறிவுமிக்க சிறப்புரைகளும் இடம்பெற்றது.

கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடியவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய பொதுமக்கள் அனுபவித்த துன்பங்களை நினைவூட்டுவதாகவும் ‘ராஜாலி சந்தேஷய’ செயல்படுகிறது. ஆசிரியரின் அனுபவங்கள் கவிதைகளுக்கு நம்பகத்தன்மையையும் உணர்வுபூர்வமான ஆழத்தையும் வழங்குவதுடன் இது போரின் தீவிரத்தன்மையையும் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக செய்யப்பட்ட மகத்தான தியாகங்களையும் வாசகர்கள் புரிந்துகொள்ள அனுமதிக்கிறது.

வண. மகா சங்கத்தினர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, கல்விமான்கள், கலைஞர்கள் மற்றும் பிற குறிப்பிடத்தக்க விருந்தினர்கள் உட்பட பலதரப்பட்ட மற்றும் புகழ்பெற்ற பார்வையாளர்களை இந்நிகழ்வு ஈர்த்தது.