05th September 2024 14:15:30 Hours
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 04 செப்டம்பர் 2024 அன்று 22 வது காலாட் படைப்பிரிவில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கியின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உன்னத பணிக்கு 95 இராணுவத்தினர் மருத்துவமனையின் இரத்த தேவையை கவனத்திற்கொண்டு தானாக முன்வந்து இரத்த தானம் வழங்கினர் என்பது குறிப்பிடதக்கதாகும்.