Header

Sri Lanka Army

Defender of the Nation

06th September 2024 10:51:42 Hours

சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் பிரதிநிதிகள் இராணுவ தளபதியை சந்திப்பு

சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் திட்டமிடல் மற்றும் பொது விவகாரங்களின் பணிப்பாளர் கேணல் கிளேட்டன் ரிக்கார்டே பொன்டெஸ் மற்றும் பிரேசிலிய இராணுவத்தின் நெறிமுறை மற்றும் நிகழ்வுகள் முகாமையாளர் மேஜர் டேனியல் லப்பரட்டா கார்டோசோ ஆகியோர் 2024 செப்டம்பர் 05 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.

மே 2025 இல் இலங்கையில் நடைபெறவுள்ள 80வது சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டத்திற்கான முன்னாயத்தம் குறித்து இச்சந்திப்பு இடம்பெற்றது. நிகழ்வின் வெற்றியை உறுதி செய்வதற்காக முன்கூட்டியே தயார்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

சந்திப்பின் நிறைவில் இராணுவத் தளபதி, இரு தரப்பினருக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை மேலும் வலுப்படுத்துதல் முகமாக சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் பிரதிநிதிகுழுவினருக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கினார்.