Header

Sri Lanka Army

Defender of the Nation

05th September 2024 14:14:30 Hours

12 வது காலாட் படைப்பிரிவினரால் பெரகம பிரதேச வைத்தியசாலை புனரமைப்புப் பணிகள் நிறைவு

அம்பலாந்தோட்டை, பெரகம பிரதேச வைத்தியசாலையில், விடுதி வளாகம், கழிவறை வளாகம், தாதியர் ஓய்வறை மற்றும் புதிய விகாரையை நிர்மாணிக்கும் பணியை 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் நிறைவு செய்தனர். 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டபிள்யூ.டபிள்யூ.எம்.ஜே.எஸ்.பிடபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் புதுப்பிக்கப்பட்ட வசதிகளை 04 செப்டம்பர் 2024 அன்று மருத்துவமனை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

மருத்துவமனையினால் கட்டுமானப் பொருட்கள் மற்றும் வளங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து இராணுவத்தினரால் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொழிலாளர் உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் , அதிகாரிகள், சிப்பாய்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.