Header

Sri Lanka Army

Defender of the Nation

05th September 2024 14:17:30 Hours

மட்டக்களப்பில் நடைப்பெற்ற சிங்கள மொழி டிப்ளோமா கற்கைநெறிக்கான சான்றிதழ் வழங்கல்

மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் ஏற்பாட்டில் சிங்கள மொழிக்கான டிப்ளோமா கற்கைநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2024 ஆகஸ்ட் 31 அன்று சந்திவெளி நிதிஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு 350 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

பிரதம விருந்தினர் தனது உரையில், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் மொழியறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பிரதான பாட பயிற்றுவிப்பாளர் திரு. எச்.எம்.அன்வர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.