Header

Sri Lanka Army

Defender of the Nation

05th September 2024 14:21:41 Hours

14 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிப்பு

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் எண்ணகருவிற்கமைய 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி உடுகம ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 592 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜீஜீசிஎஸ் கால்லகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினரால் நெடுங்கேணி தண்டுவானில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.

இம் முயற்சியானது இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்டிஎம்ஏபீகே திசாநாயக்க அவர்களின் மேற்பார்வையில், 04 செப்டம்பர் 2024 அன்று நிறைவு செய்யப்பட்ட புதிய வீடு பயனாளியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.