Header

Sri Lanka Army

Defender of the Nation

04th September 2024 16:21:22 Hours

23 வது காலாட் படைப்பிரிவில் விரிவுரைத் தொடர்

23 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.காரியவசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 23 வது காலாட் படைப்பிரிவில் 28 ஆகஸ்ட் 2024 அன்று விரிவுரைத் தொடர் நடாத்தப்பட்டது.

ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகம் பற்றிய அறிவை மேம்படுத்துவும் சட்டவிரோத போதைப் பொருள், அதன் விளைவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டங்கள் உட்பட தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை படையினரிடையே ஏற்படுத்துவதை இந்த விரிவுரைகள் நோக்கமாகக் கொண்டிருந்ன.

விரிவுரைகள் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் கல்விசார் பணிப்பகத்தின் பணியாளர்கள் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் விரிவுரையாளர் திரு. என்.ஜி. தனுஷ்க சம்பத் விஜேசிங்க ஆகியோரினால் நிகழ்த்தப்பட்டதுடன், இவ்விரிவுரைகளில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.