Header

Sri Lanka Army

Defender of the Nation

04th September 2024 21:11:43 Hours

இராணுவ தலைமையகத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு தொடர்பான விரிவுரை

ஆபத்தான மருந்துகள், அவற்றின் விளைவுகள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான சட்டக் கட்டமைப்பு தொடர்பான விழிப்புணர்வு விரிவுரை 29 ஆகஸ்ட் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடாத்தப்பட்டது.

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபார் (ஒ/எல்) ஒஷான் ஹேவாவிதாரன இந்த அமர்வை நடத்தினார்.

இந் நிகழ்ச்சியில் 874 அதிகாரிகளும் 5729 சிப்பாய்களும் நேரிலும், நிகழ்நிலையிலும் பங்கேற்றனர்.