03rd September 2024 19:13:09 Hours
யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இயந்திரவியற் காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ், இயந்திரவியற் காலாட் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் ஏகே பீரிஸ் ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் அறுவடை விழா பாரம்பரிய மற்றும் மத சடங்குகளுடன் 03 செப்டம்பர் 2024 அன்று தம்புள்ளையில் உள்ள இயந்திரவியற் காலாட் படையணியில் இடம்பெற்றது.
1.5 ஏக்கர் நெல் வயல்களில் குறுங்கால விளைச்சல் ரக நெல் இனம் பயிரிடப்பட்டது. முதன்மையான பாரம்பரியத்தை மதித்து, சிறந்த விளைச்சலை விரும்பி நெல் மூட்டையின் முதல் பங்கு அதே இடத்தில் வைக்கப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.