03rd September 2024 19:15:49 Hours
இலங்கை பொறியியல் படையணி படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான விஷேட படையணியின் மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு, 02 செப்டம்பர் 2024 அன்று பனாகொடை இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதனை முன்னிட்டு பிரியாவிடை நிகழ்வு நடத்தப்பட்டது.
அவரது தாய் படையணி என்ற வகையில், இலங்கை பொறியியல் படையணி சிரேஷ்ட அதிகாரியை முறையான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி பதில் நிலைய தளபதியின் வரவேற்பின் பின்னர் இலங்கை பொறியியல் படையணி படையினரால் அணிவகுப்பு மைதானத்தில் வண்ணமையமான அணிவகுப்பு மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். நிகழ்வைத் தொடர்ந்து ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியை அவரது குடும்பத்துடன் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.
பிரியாவிடை சம்பிரதாய நிகழ்வுகள், படையணி அதிகாரிகள் உணவகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததுடன் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை பொறியியல் படையணி அதிகாரிகள் கலந்துகொண்ட தேநீர் விருந்துபசார்த்துடன் நிறைவுற்றது. அதிகாரிகள் உணவகத்தில் நடந்த உரையாடலின் போது, படைத்தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி பணியின் போது இராணுவத்திற்கும் நாட்டிற்கும் நியமனங்களிலும் வழங்கிய மதிப்புமிக்க பங்களிப்பை பாராட்டினார்.