04th September 2024 16:03:17 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இராணுவ விஷேட படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் குறிபார்த்து சுடல் போட்டியில் திறந்த மற்றும் புதியவர்கள் பிரிவில் சாம்பியன்ஷிப்பை வென்ற விஷேட படையணியின் வீரர்களை விஷேட படையணி தலைமையகத்தில் பாராட்டினார்.
2024 இல் இலங்கை இராணுவ விஷேட படையணி குறிபார்த்து சுடல் சாம்பியன்ஷிப்பில் திறந்த மற்றும் புதியவர்கள் பிரிவுகளில் வெற்றிபெற்று வரலாற்று சாதனை வெற்றியைப் பெற்றது. புதியவர் பிரிவு புள்ளிகளில் புதிய சாதனை படைத்தது. லான்ஸ் கோப்ரல் எச்ஏடீ சந்தகெலும் சிறந்த குறிபார்த்து சுடும் வீரராகவும் சார்ஜன் மேஜர் பீஎச்எம்பீ புஞ்சிஹேவ சிறந்த சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரியாகவும் தெரிவாகி விஷேட படையணிக்கு கௌரவத்தை கொண்டுவந்தனர்.
சந்திப்பின் போது, படையணி தளபதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக குறிபார்த்து சுடும் வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பரிசளிப்பு விழாவைத் தொடர்ந்து களியாட்ட நிகழ்ச்சியுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.