03rd September 2024 21:11:29 Hours
மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்எஎன்ஜே ஆரியசேன அவர்கள் ஒய்வு பெற்றுசெல்லும் முன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 03 செப்டம்பர் 2024 அன்று தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பதவிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்பாட்டிற்காக இராணுவத் தளபதி பாராட்டுக்களை தெரிவித்தார்.
அவரது பணிக்காலம் முழுவதும் அவரது குடும்பம் ஆற்றிய முக்கிய பங்கையும் இராணுவத் தளபதி நினைவு கூர்ந்தார்.
இதற்குப் பதிலளித்த மேஜர் ஜெனரல் எஸ்எஎன்ஜே ஆரியசேன அவர்கள் இராணுவத் தளபதி வழங்கிய உறுதியான வழிகாட்டல் மற்றும் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்தார். கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டு சின்னமும் அவரது அவரது பாரியாருக்கு பரிசும் வழங்கினார்.
மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் எஸ்எஎன்ஜே ஆரியசேன அவர்கள் 1991 ஜனவரி 20 ஆம் திகதி பாடநெறி இல. 35 இன் ஊடாக பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இணைந்துக்கொண்டார். தியத்தலாவ - இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 1992 ஆகஸ்ட் 29 திகதி இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு இறுதியில் 05 ஜூன் 2024 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 08 செப்டம்பர் 2024 இல் தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுகின்றார். அவர் ஓய்வுபெறும் போது, இராணுவ தலைமையகத்தின் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகிக்கின்றார்.
பலாலி உள்ளக பாதுகாப்பு பிரிவின் குழு தளபதி, வவுனியா உள்ளக பாதுகாப்பு பிரிவின் குழு தளபதி, வெலிஓயா களப் பணிமனையின் கட்டளை அதிகாரி, 2 வது (தொ) மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையலகு பணிமனை அதிகாரி, 1 வது (தொ) மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பணிமனை அதிகாரி, மன்னார் களப் பணிமனையின் கட்டளை அதிகாரி, 53 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட மின்சார மற்றும் இயந்திர பொறியியல் அதிகாரி, மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பாடசாலையின் நிறைவேற்று அதிகாரி, மின்சார மற்றும் இயந்திர பொறியியல் கவசப் பிரிகேட் பணிமனையின் கட்டளை அதிகாரி, உடவலவ தளப் பணிமனையின் இரண்டாம் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையகத்தின் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2, 2 வது (தொ) மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் (வழங்கல்) பணி நிலை அதிகாரி 2, இராணுவத் தலைமையகத்தின் மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் பணிப்பகத்தின் கேணல் (திட்டங்கள்), கட்டுபெத்த தளப் பணிமனையின் தளபதி, 65 வது காலாட் படைப்பிரிவின் கேணல் (நிர்வாகம் மற்றும் வழங்கல்), கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் (நிர்வாகம் மற்றும் வழங்கல்),இராணுவ தலைமையகத்தில் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் கேணல் (மின்சார மற்றும் இயந்திர பொறியியல்), இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரிகேடியர் (வழங்கல்), முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் (நிர்வாகம் மற்றும் வழங்கல்), இலங்கை மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படையணியின் தலைமையக தளபதி, இராணுவத் தலைமையகத்தின் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் மற்றும் இராணுவத் தலைமையகத்தின் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பல்வேறு நியமனங்களை அவர் தனது பணிக்காலத்தில் வகித்துள்ளார்.
சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவ வாழ்க்கையில் இளம் அதிகாரிகள் பாடநெறி, இந்தியா இளம் தொழில்நுட்ப அதிகாரிகள் பாடநெறி, இந்தியா வேலைத்தள தளபதி பாடநெறி, சீனா பீரங்கி மின்சார உபகரணங்கள் பழுது பார்த்தல் பாடநெறி, இந்தியா சிரேஷ்ட அதிகாரிகளின் மின்சார மற்றும் பொறியியல் பாடநெறி உள்ளிட்ட ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கற்கைகளை கற்றுள்ளார்.
சிரேஷ்ட அதிகாரி இலங்கையில் கோல்டன் கீ தகவல் தொழில்நுட்பம் நிறுவனத்தின் கணினி அறிவியலில் பாடநெறி உட்பட பல இராணுவம் அல்லாத உயர் கல்வி கற்கைகளையும் பயின்றுள்ளார்.