03rd September 2024 18:53:09 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையணிகளுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் - 2024 ஆனது 28 ஆகஸ்ட் 2024 அன்று தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஏஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.
பிரதம அதிதியின் வருகையுடன் கண்டி நடனக் கலைஞர்களின் பாரம்பரிய நடனமும் இடம்பெற்றது. இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஜீபீ சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்களால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டதுடன் இலங்கை இராணுவ தொண்டர் படையணி வரலாற்றையும் விளையாட்டு சாதனைகளையும் பாராட்டி அதிதிகள் மற்றும் விருந்தினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொண்டர் படையணி கட்டளையின் கீழ் ஒவ்வொரு இராணுவ ஸ்தாபனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்திய சிறந்த விளையாட்டு வீரர்கள் 24 தடம் மற்றும் சுவட்டு நிகழ்வுகளில் 26 முதல் 28 ஆகஸ்ட் 2024 வரை போட்டியிட்டனர்.
10000 மீற்றர் ஓட்டத்தை 35:00.42 நிமிடங்களில் நிறைவு செய்து 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சிப்பாய் டபிள்யூ.ஏ.எம்.ஆர்.விஜேசூரிய புதிய சாதனை படைத்தார்.
தொடர்ந்து, 2023 இல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் தேசிய சாதனையை படைத்து, 2024 இல் பரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டிகளில் கலந்து கொண்ட தில்ஹானி லெகாம்கேவுக்கு பிரதம விருந்தினரின் பாராட்டுச் சின்னமும் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏடப்ளியூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணியினை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், இலங்கை தடகள சங்க பிரதித் தலைவர் திரு. ஜகத்ஞானசிறி சில்வா, அழைக்கப்பட்ட அதிதிகள் மற்றும் விளையாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இறுதிப் போட்டியின் திறன் வெளிப்பாடுகள் பின்வருமாறு:
சாம்பியன் கிண்ணங்கள்:
ஆண்கள் பிரிவு - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி
பெண்கள் பிரிவு – 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி
இரண்டாமிடம்:
ஆண்கள் பிரிவு - இலங்கை இலேசாயுத காலாட் படையணி
பெண்கள் பிரிவு - 2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணி
மிகச் சிறந்த திறன் (பெண்கள்)
100 மீற்றர் தடை தாண்டல் – சார்ஜன் டபிள்யூ.வி.எல் சுகந்தி
மிகச் சிறந்த திறன் (ஆண்கள்)
100 மீட்டர் - சிப்பாய் கே.ஏ.பீ மல்ஷன்