04th September 2024 21:08:13 Hours
2024 செப்டெம்பர் 2ம் திகதி ஆண்களுக்கான எப்44 ஈட்டி எறிதல் போட்டியில் 67.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II சமித்த துலான் கொடித்துவக்கு அவர்கள் புதிய உலக சாதனையை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்திய வீரர் சுமித் அன்டில் F64 பிரிவில் தங்கம் பதக்கம் வென்றதுடன் 70.59 மீட்டர் தூர சாதனையை பதிவு செய்தார். டோக்கியோ - 2020 பரா ஒலிம்பிக் போட்டியில் அவரால் நிகழ்த்திய உலக சாதனை இம்முறை முறியடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் அவரது திறமையானது பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவரின் வெற்றிகரமான சாதனைகளில் முதன்மையானதாகும். பாரிஸ் 2024ல் இதுவரை நம் நாட்டிற்காக பதக்கம் வென்ற ஒரே வீரர் இவர் ஆவார்.