02nd September 2024 17:50:13 Hours
பிரிகேடியர் சலில் பாண்டே தலைமையிலான இந்திய இராணுவ தேசிய பாதுகாப்பு கல்லூரி பாடநெறி - 84 இன் நான்கு பேர் கொண்ட குழுவினர், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தனர். பிரிகேடியர் தபஸ் குமார் மிஸ்ரா, ஏர் கொமடோர் ராமச்சந்திர வெங்கடேஸ்வர பிரகாஷ் மற்றும் லெப்டினன் கேணல் மந்தீப் சிங் நேகி ஆகியோர் இந்த குழுவில் வருகை தந்திருந்தனர்.
சந்திப்பின் போது, இந்திய மற்றும் இலங்கை ஆயுதப் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை பதவி நிலை பிரதானி முன்னிலைப்படுத்தியதுடன், உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பயிற்சி தொகுதிகளை பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் தெரிவித்தார். வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிகள் பதவி நிலை பிரதானிக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டதுடன் வருகையின் நினைவாக அவர்கள் அனைவரும் பதவி நிலை பிரதானியுடன் குழு படம் எடுத்துக்கொண்டனர். நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் சந்திப்பு நிறைவுற்றது.
இராணுவ செயலாளரும் பயிற்சி பணிப்பக பதில் கடமை பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் கே.எம்.பி.எஸ்.பி. குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.