Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd September 2024 19:17:44 Hours

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்தஹிரு சேயாவிற்கு விஜயம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்கள் 31 ஆகஸ்ட் 2024 அன்று "சந்ஹிரு சேயாவிற்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டார்.

தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் நிமித்தம் இவ்விஜயம் முன்னெடுக்கப்பட்டது. தனது விஜயத்தின் போது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நிர்மாணப் பணிகளை மீளாய்வு செய்ததுடன், தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார். சந்தஹிரு சேய திட்டத்தின் திட்ட அலுவலர் தற்போதைய முன்னேற்றம் மற்றும் திட்டத்தை உரிய நேரத்தில் முடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து விளக்கினார்.

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஏஸ்பீ என்டியூ, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ சந்தஹிரு சேய திட்டத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பணி நிலை அதிகாரிகள் ஆகியொரும் இந் விஜயத்தில் பங்கேற்றனர்.