Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd September 2024 18:00:57 Hours

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் சபுமல்கஸ்கட விகாரையின் புதிய தூபி திறந்து வைப்பு

வவுனியா போகஸ்வெவ சபுமல்கஸ்கட விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தூபி 2024 ஆகஸ்ட் 31 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

வருகை தந்த, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஏஸ்பீ என்டியூ, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ மற்றும் 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோர் மரியாதையுடன் வரவேற்றனர்.

சபுமல்கஸ்கட விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி நாயக்க தேரர் தலைமையில் மகா சங்கத்தினரின் பீரித் பாராயணங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சபுமல் தூபி மற்றும் அன்னதான மண்டபத்தை திறந்து வைத்தார். செயலாளரும் ஏனைய அழைப்பாளர்களும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சபுமல் தூபியின் புத்தர் சிலைக்கு மலர் வழிப்பாடு செய்தலுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் போஷாத் பாரமித்தா பதனம மற்றும் சசுங்கேத்த ஆஸ்வத்தமு அமைப்புகளின் உறுப்பினர்கள், கிராமவாசிகள் மற்றும் யாத்ரீகர்கள் கலந்துகொண்டனர்.