02nd September 2024 14:25:29 Hours
53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டீஐ மஹாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 53 வது காலாட் படைபிரிவு அதன் 29வது ஆண்டு நிறைவை 24 ஆகஸ்ட் 2024 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் கொண்டாடியது.
வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர் அவர் படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையை அங்கீகரித்து உரையாற்றினார். அதனை தொடர்ந்து படைப்பிரிவு தளபதி அனைத்து நிலையினருடனான மதிய விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதுடன் அதைத் தொடர்ந்து மாலையில் ஒரு இசை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், தளபதி சவால் கிண்ண கிரிகெட் போட்டி 2024 ஆகஸ்ட் 18 முதல் 23 வரை நடைபெற்றது. பரபரப்பான இறுதிப்போட்டியில், 19 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது. கெப்டன் ஜேகேடீடீ சில்வா சிறந்த பந்து வீச்சாளருக்கான கிண்ணத்தையும் பணிநிலை சார்ஜன் டீஜீஏஎஸ் குமார போட்டி நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார். மேலும் இந் நாளின் நினைவாக 21 ஆகஸ்ட் 2024 அன்று போதி பூஜையும் நடத்தப்பட்டது.