Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd September 2024 14:20:49 Hours

நிதி முகாமைத்துவ பணிப்பக பணிப்பாளர் 1வது பொது சேவை படையணிக்கு விஜயம்

நிதி முகாமைத்துவ பணிப்பக பணிப்பாளரும் இராணுவ பொது சேவை படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎம்கேஜிபீஎஸ்கே அபேசிங்க அவர்கள் 2024 ஆகஸ்ட் 22 அன்று 1 வது இலங்கை இராணுவ பொது சேவை படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த படைத்தளபதிக்கு பாதுகாவாலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் 1 வது இலங்கை இராணுவ பொது சேவை படையணி கட்டளை அதிகாரி மேஜர் கேடப்ளியூகேஏபீ வன்னியாராச்சி யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் படையலகு அதிகாரிகளுடன் அன்புடன் வரவேற்றார். தொடர்ந்து 1 வது இலங்கை இராணுவ பொது சேவை படையணி கட்டளை அதிகாரி, படையலகின் பணிகள், பொறுப்புகள் மற்றும் சமீபத்திய சாதனைகள் பற்றிய விரிவான விளக்கங்களை வழங்கினார்.

படையினருக்கு உரையாற்றிய நிதி முகாமைத்துவ பணிப்பக பணிப்பாளரும் இராணுவ பொது சேவை படையணி படைத்தளபதி அவர்கள் இராணுவத்தின் நற்பெயரையும் ஒழுக்கத்தையும் நிலைநிறுத்தும் அதே வேளையில், படையணியின் ஓர் அங்கமாக பெருமையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

ஒரு மதிப்புமிக்க பாத்திரத்தை மரபுரிமையாகப் பெறுவதில் அவர்களின் நிலையை அவர் மேலும் நினைவுபடுத்தியதுடன் அதன் பாரம்பரியத்தைப் பாதுகாக்க அவர்களை ஊக்குவித்தார்.

குழு படங்கள் எடுத்தல், மரக்கன்று நாட்டல் மற்றும் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் படைத்தளபதி எண்ணங்களை பதிவிடல், என்பவற்றுடன் விஜயம் நிறைவுற்றது.