Header

Sri Lanka Army

Defender of the Nation

01st September 2024 15:04:07 Hours

காலாட் படை பயிற்சி மையத்தின் 40வது ஆண்டு நிறைவு

மின்னேரியாவில் உள்ள காலாட் படை பயிற்சி மையம் தனது 40வது ஆண்டு நிறைவை 28 ஆகஸ்ட் 2024 அன்று தொடர் நிகழ்வுகளுடன் பெருமையுடன் கொண்டாடியது.

ஆண்டு நிறைவு நிகழ்வுகள் 20 ஆகஸ்ட் 2024 அன்று அழகிய மின்னேரியா குளக்கட்டின் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும் உன்னத முயற்சியுடன் ஆரம்பமாகின.

இதைத் தொடர்ந்து 21 ஆகஸ்ட் 2024 அன்று மின்னேரியா ஆலயத்தில் கொடி ஆசீர்வாத விழாவும், 22 ஆகஸ்ட் 2024 அன்று சோமாவதி விகாரையில் போதி பூஜை நிகழ்வும் நடைபெற்றது. 23 ஆகஸ்ட் 2024 அன்று காலை சோமாவதி விகாரையில் மகா சங்க உறுப்பினர்களுக்கான தானம் வழங்கல் நிகழ்வும் நடைபெற்றது.

ஆண்டு நிறைவை ஒட்டி 2024 ஆகஸ்ட் 26 அன்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ஊழியர்களின் உதவியுடன் இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி காலாட் படை பயிற்சி மைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

28 ஆகஸ்ட் 2024 அன்று முக்கிய நிகழ்வாக, காலாட் படை பயிற்சி மைய தளபதி பிரிகேடியர் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காலாட் பயிற்சி மையத்தின் நுழைவாயிலில் படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து, வண்ணமயமான சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையும் தளபதிக்கு வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதைக்கு பிறகு, தளபதி காலாட் படை பயிற்சி மைய பணியாளர்களுடன் குழு படம் எடுத்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து, இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், பிரதம அதிதி மற்றும் காலாட் பயிற்சி மைய பணியாளர்களுடன் தேசிக்கன்றுகளை நாட்டினர்.

பயிற்சி மைய தளபதி, கட்டளை அதிகாரி,பிரதம பயிற்றுவிப்பாளர், காலாட் பயிற்சி மைய பணிநிலை அதிகாரிகள், பயிற்றுவிப்பு அதிகாரிகள், பயிற்சி மைய சார்ஜன் மேஜர் மற்றும் காலாட் பயிற்சி மையத்தின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிப்பாய்கள் கலந்து கொண்ட அனைத்து நிலையினருடான மதிய உணவுடன் ஆண்டு நிறைவு விழா நிறைவு பெற்றது.