Header

Sri Lanka Army

Defender of the Nation

30th August 2024 22:54:57 Hours

இராணுவ படையணிகளுக்கிடையிலான குறிபார்த்து சுடுதல் போட்டி – 2024 நிறைவு

இராணுவ படையணிகளுக்கிடையிலான குறிபார்த்து சுடுதல் போட்டி – 2024 இல் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வு 2024 ஆகஸ்ட் 30 ம் திகதி இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி சீன - இலங்கை சினேகபூர்வ அரங்கில் இடம்பெற்றது. இந் நிகழ்வில இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இராணுவ இலகுரக ஆயுத சங்கம், குறிப்பார்த்து சுடல் பயிற்சி பாடசாலையுடன் இணைந்து நடாத்திய படையணிகளுக்கிடையிலான குறிபார்த்து சுடுதல் போட்டி – 2024, ஆகஸ்ட் 16 முதல் 25 வரை தியத்தலாவ சூட்டு திடலில் நடைபெற்றது. இப்போட்டியில் இராணுவத்தின் 23 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 37 அணிகள் கலந்துகொண்டன.

இந் நிகழ்வில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.

சிறப்பு திறன்களை வெளிப்படுத்திய படையணிகள் மற்றும் வீரர்கள் பின்வருமாறு:

1. திறந்த குழு சாம்பியன்ஷிப்

சாம்பியன் – விஷேட படையணி

இரண்டாமிடம் - கஜபா படையணி

2. புதியவர்கள் குழு சாம்பியன்ஷிப்

சாம்பியன் – விஷேட படையணி

இரண்டாமிடம் - கமாண்டோ படையணி

3. சேவை படையணி சாம்பியன்ஷிப்

சாம்பியன் - இலங்கை இராணுவ பொலிஸ் படையணி

இரண்டாமிடம் - இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி

4. சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் - 3 வது விஷேட படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்ஏடீ சந்தகெலும்

5. கொடி அதிகாரி பிரிவில் சிறந்த குறிபார்த்து சுடல் - பிரிகேடியர் எச்ஏஏஎன்சீ பிரபாத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ

6. சிறந்த சிரேஷ்ட அதிகாரி - கேணல் டிசீஎஸ்கே அத்துகோரல ஆர்எஸ்பீ

7. சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை - இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் கேடீஎம்டீ திசாநாயக்க

9. புதியவர் பிரிவில் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் - விஜயபாகு காலாட் படையணி லெப்டினன் பீடபிள்யூஎஸ்என் ஜயசிங்க