02nd September 2024 14:08:08 Hours
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 28 ஆகஸ்ட் 2024 அன்று 52 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் அதிகாரிகள் பயிற்சி தினம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் போது, விஜயபாகு காலாட் படையணியின் கேப்டன் எஸ்டிடிஏ மதுசங்கவினால் ‘பங்காளதேச நெருக்கடி’ என்ற தலைப்பில் விரிவுரை ஒன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கட்டளை பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் அதிகாரிகள் பங்கேற்றதுடன் சில படையினர் ஆன்லைன் தளம் மூலம் இணைந்தனர். கேள்வி-பதில் நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.