Header

Sri Lanka Army

Defender of the Nation

30th August 2024 22:54:56 Hours

படையணிகளுக்கு இடையிலான மேசைப்பந்து போட்டி - 2024 நிறைவு

இலங்கை இராணுவ மேசைப்பந்து கழகத்தின் ஏற்பாட்டில் படையணிகளுக்கு இடையிலான மேசைப்பந்து போட்டி - 2024 ஆனது ஆகஸ்ட் 27 முதல் 29 வரை பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப் போட்டியில் 8 இராணுவப் படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 11 அணிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபற்றினர்.

இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சம்பியன்ஷிப்களை இலங்கை சமிஞ்ஞை படையணியும், இரண்டாம் இடத்தை ஆண்கள் பிரிவில் கஜபா படையணியும், பெண்கள் பிரிவில் இலங்கை இராணுவ மகளிர் படையணியும் பெற்றுக்கொண்டன.

இப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சிறந்த வீரராக கஜபா படையணியின் சிப்பாய் யூஎன் ரணசிங்கவும், பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனையாக இலங்கை மகளிர் படையணியைச் சேர்ந்த சார்ஜன் கேஎச் பிட்டிகலவும் விருது பெற்றனர்.

இந் நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.