30th August 2024 11:54:34 Hours
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை பணிக்காக செல்லவிருக்கும் அணிக்கான முன்பயிற்சி பாடநெறி எண் 16 ஆனது இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 29 ஆகஸ்ட் 2024 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 28 அதிகாரிகள் மற்றும் 218 சிப்பாய்களின் பங்கேற்புடன் 05 ஆகஸ்ட் 2024 அன்று பாடநெறி ஆரம்பமானது. ஐக்கிய நாடுகள் சபையின் நடைமுறை மற்றும் கோட்பாட்டு அம்சங்கள் மற்றும் கட்டளையின்படி ஒதுக்கப்பட்ட சிறப்புப் பணிகள் தொடர்பான புரிதலை மேம்படுத்துவது இப்பயிற்சியின் நோக்கமாகும்.
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் எஸ்ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி நிறைவுரையாற்றினார். இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.