Header

Sri Lanka Army

Defender of the Nation

30th August 2024 11:56:45 Hours

உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண். 132 விடுகை அணிவகுப்பு

உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி - 132 இன் விடுகை அணிவகுப்பு 25 ஆகஸ்ட் 2024 அன்று பனகொடை இராணுவ வளாக இராணுவ உள்ளக அரங்கில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ உடற் பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் பிகேஎஸ்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்துகொண்டார். 63 நாள் பாடநெறி 2024 மே 27 முதல் ஆகஸ்ட் 25 வரை 112 சிப்பாய்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.

2 வது விஷேட படையணியின் கோப்ரல் டபிள்யூவிஎன் சந்துருவன் தகுதியின் அடிப்படையில் முதலிடத்தைப் பெற்று சிறந்த மாணவர் மற்றும் சிறந்த உடற்பயிற்சி வீரர் விருதுகளைப் பெற்றார். 1 வது விஷேட படையணியின் கோப்ரல் எச்ஜிடி துஷங்க சிறந்த சகிப்புத்தன்மைக்கான அங்கீகாரத்தைப் பெற்றார், அதற்கமைய காலாட் படையணியின் வீரர் எஸ்எம் பிரியங்கர சிறந்த விளையாட்டு வீரராக கௌரவிக்கப்பட்டார். 5 வது இலங்கை கவச வாகன படையணியின் கோப்ரல் ஜீடிகேடி சந்துருவன் சிறந்த பிரிவு தளபதிக்கான விருதை பெற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.