27th August 2024 20:01:13 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக உளவியல் செயற்பாட்டு பிரிவினால் 2024 ஆகஸ்ட் 20 முதல் 23 வரை பிரதேசத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் மன உறுதியை மேம்படுத்தும் வகையில் விரிவுரைகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் உதவியுடன் இவ் விரிவுரை நடத்தப்பட்டது. இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் லெப்டினன் கேணல் ஈஏஏஎஸ் எதிரிசிங்க அவர்களால் “போர் வரலாறு” தொடர்பான விரிவுரையும் இராணுவப் புலனாய்வுப் படையணியின் மேஜர் எம்எச்எம்எஸ் பண்டார அவர்களால் “குடும்பம், நான் மற்றும் வேலை” என்ற தலைப்பில் விரிவுரையும் நடாத்தப்பட்டது. இவ்விரிவுரைகளில் 54 அதிகாரிகள் மற்றும் 897 சிப்பாய்கள் பங்கேற்றனர்.