27th August 2024 20:15:39 Hours
மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 17 வது தளபதியாக 2024 ஆகஸ்ட் 23 கடமைகளை பொறுப்பேற்றார்.
புதிய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கு தலைமையக வளாகத்தில் இலங்கை பொறியியல் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கை மற்றும் அணிவகுப்பு கௌரவிப்பு மரியாதை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் சிரேஷ்ட அதிகாரி உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு கடமைகளை பொறுப்பேற்றார். பின்னர் குழு படம் எடுத்துக்கொண்ட அவர் கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் மரக்கன்று ஒன்றை நாட்டியதுடன் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தில் கலந்துகொண்டார்.
பின்னர், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகளால் விரிவான விளக்கம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தளபதி படையினருக்கு உரையாற்றுகையில் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தையும் வெற்றியை அடைவதில் அதன் ஒருங்கிணைந்த பங்களிப்பையும் எடுத்துரைத்தார் அவர் கட்டளைக்கான தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டதுடன் இலக்குகளில் படையினரின் பொதுவான நோக்கங்களையும் பகிர்ந்து கொண்டார். இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.