26th August 2024 14:11:27 Hours
சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்காக வடிவமைக்கப்பட்ட படையலகு ஆதரவு ஆயுத பயிற்சி பாடநெறி – 100 (2024/ II) 07 மே 2024 அன்று ஆரம்பிக்கப்பட்டு 2024 ஆகஸ்ட் 22 அன்று மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தில் 48 சிப்பாய்களின் பங்களிப்புடன் நிறைவடைந்தது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலைய தளபதி பிரிகேடியர் எம்பீஎன்எ முத்துமாலை யூஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார். நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இப்பாடநெறியில் சிறந்த வீரர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம்
1ம் இடம் - விஜயபாகு காலாட் படையணியின் கோப்ரல் பிஎம்பீ எதிரிவீர
2ம் இடம் - இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கோப்ரல் டபிள்யூஎம்எஸ் விஜயசிங்க
3ம் இடம் - கமாண்டோ படையணியின் கோப்ரல் என்பீகேவீஎஸ் நாரங்கொட