Header

Sri Lanka Army

Defender of the Nation

26th August 2024 13:56:20 Hours

இராணுவ தளபதி இவானையில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு வழங்கல்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 25 ஆகஸ்ட் 2024 அன்று யாழ்ப்பாணம் இவானையில் திருமதி சுகன்யாவிற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை கையளித்தார்.

15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் திரு. சுமி சின்னையா மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் வன்னி உதவி கனடா சங்கம் ஆகியோரின் நிதி உதவியுடன் தங்களின் மனிதவளம் மூலம் இந்த வீட்டை நிர்மாணித்தனர்.

இத் திட்டம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரவி ரத்னசிங்கம் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி, 553 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டப்ளியூ ஏ ஐ எஸ் மென்டிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ , சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.