Header

Sri Lanka Army

Defender of the Nation

30th August 2024 22:54:58 Hours

இராணுவத் தளபதியினால் 553 வது காலாட் பிரிகேடில் புதிய உடற்பயிற்சி கூடம் திறப்பு

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 25 ஆகஸ்ட் 2024 அன்று 553 வது காலாட் பிரிகேட் வளாகத்தில் புதிய உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைத்தார்.

யாழ் பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி மற்றும் 553 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டப்ளியூ ஏ ஐ எஸ் மென்டிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இத் திட்டத்தினை மேற்பார்வையிட்டனர்.

பிரிகேடின் பணியாளர்களின் நல்வாழ்வு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதில் இந்த புதிய வசதி முக்கியத்துவம் வாய்ந்தது எடுத்துரைக்கும் வகையில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ் விழாவில் கலந்துகொண்டனர்.