Header

Sri Lanka Army

Defender of the Nation

25th August 2024 18:29:35 Hours

யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் இராணுவ தளபதி பங்கேற்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 25 ஆகஸ்ட் 2024 அன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பனை சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது லீக் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர்களின் ஒத்துழைப்புடன் யாழ். பாதுகாப்பு படை தலைமையக படையினரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வு சமூகத்தில் நட்புறவை வளர்க்கும் நோக்கில் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் கிளிநொச்சி ஜீனியஸ் அணி வெற்றியீட்டியதுடன், வெற்றி பெற்ற அணிக்கு இராணுவத் தளபதி பரிசுகளையும் 'பனை கழக சவால் கிண்ணத்தையும்' வழங்கி வைத்தார். வடக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரொஹான் அபேசிங்க, வடக்கின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பெருமளவிலான இராணுவ மற்றும் பொதுமக்கள் இப்போட்டியை கண்டுகளித்தனர். 51 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் மதிய உணவுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

அந் நாளின் பிற்பகல், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து பலாலியில் இராணுவத்தினரால் வலைப்பந்தாட்டத்திற்கான வசதிகளை உள்ளடக்கிய பல புதிய வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட மைதானத்தை திறந்து வைத்தார். பின்னர், வளாகத்தில் உள்ள சிமிக் பூங்காவை இராணுவ தளபதி பார்வையிட்டார். இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கு எழுதுபொருள் பொதிகள் வழங்கலுடன் அந் நாளின் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.