25th August 2024 14:31:06 Hours
212 வது காலாட் பிரிகேட் தனது 13வது ஆண்டு நிறைவு விழாவை 2024 ஆகஸ்ட் 15 அன்று 212 வது காலாட் பிரிகேட் வளாகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்எம்சி ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.
இராணுவ சம்பிரதாயங்களைத் தொடர்ந்து நுழைவாயிலில் 212 வது காலாட் பிரிகேட் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதனைத் தொடர்ந்து, 212 வது காலாட் பிரிகேட் தளபதி 212 வது காலாட் பிரிகேட் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டினார். படையினருக்கு உரையாற்றியதனை தொடர்ந்து, குழுப்படம் எடுப்பதற்கு முன்னதாக அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தில் அனைவரும் பங்கேற்றனர்.
ஆண்டு விழாவையொட்டி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் 'போதி பூஜை' நடத்தப்பட்டதுடன் அருகாமையில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களை சுத்தப்படுத்தவும், அவர்களுக்கு சுவையான மதிய உணவை வழங்கவும் உதவினார்.
மாலையில் இசை நிகழ்ச்சியுடன் ஆண்டு விழா நிறைவு பெற்றது.
212 வது காலாட் பிரிகேட் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்றனர்.