23rd August 2024 17:37:39 Hours
மதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வனப்போர் யுத்திகள் பாடநெறி இலக்கம் 37 இல் கலந்துகொண்ட படைப்பிரிவைச் சேர்ந்த 32 படையினரை 56 வது காலாட்படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பாராட்டினார்.
2024 மே 09 முதல் 2024 ஜூலை 31 வரை, 67 படையினரின் பங்கேற்புடன் இந்தப் பாடநெறி நடைபெற்றது. 18 ஆகஸ்ட் 2024 அன்று, படைப்பிரிவில் நடைப்பெற்ற நிகழ்வின் போது தளபதி அனைத்து பங்கேற்பாளர்களின் கடின உழைப்பு மற்றும் சாதனைகளை பாராட்டினார்.