25th August 2024 08:05:36 Hours
மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் படையினரால் 2024 ஆகஸ்ட் 21 அன்று மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில், மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் தளபதியாக இருந்து வெளிச்செல்லும் மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுஎம் பெர்னாண்டோ டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களுக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது.
வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கி கெளரவிக்கப்பட்டது. பின்னர் சிரேஷ்ட அதிகாரி, அனைத்து நிலையினருடன் குழு படம் எடுத்துக் கொண்டார். மேலும், தனது பதவிக்காலத்தில் படையினரின் பெறுமதிமிக்க சேவைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.