25th August 2024 14:30:50 Hours
சேருவில மங்கள ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வண. அலுதெனியே சுபோதி தேரரின் கருத்துக்கமைய 9 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் சேருவில நெலும்கம பிரதேசத்தில் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடொன்றை நிர்மாணித்துள்ளனர்.
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 21 ஆகஸ்ட் 2024 அன்று புதிய வீடு பயனாளிக்கு வழங்கப்பட்டது. அமெரிக்கா, கலிபோர்னியாவைச் சேர்ந்த ஔதை ஷகூர் அறக்கட்டளை மற்றும் வைத்தியர் பூஜா ஷகூர் ஆகியோர் கட்டுமானத்திற்கு நிதியுதவி அளித்தனர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.