22nd August 2024 20:45:09 Hours
மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுஎம் பெர்னாண்டோ டப்ளியுடப்ளயுவீ ஆர்டப்ளியுவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 35 வருட கால சிறப்புமிக்க சேவையின் பின்னர் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், அவரது துணைவியருடன் 22 ஆகஸ்ட் 2024 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பதவிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காகவும், அவரது பணிக்காலம் முழுவதும் அவரது குடும்பம் ஆற்றிய முக்கிய பங்கிற்கும் இராணுவத் தளபதி பாராட்டுக்களை தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுஎம் பெர்னாண்டோ டப்ளியுடப்ளயுவீ ஆர்டப்ளியுவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி தனக்கு வழங்கிய உறுதியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டு மற்றும் பாராட்டுக்கான சிறப்பு நினைவுச் சின்னமும் அவரது அவரது பாரியாருக்கு பரிசும் வழங்கினார்.
சிரேஷ்ட அதிகாரி தொடர்பாக விளக்கம் பின்வருமாறு
மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுஎம் பெர்னாண்டோ அவர்கள் 1989 ஜனவரி 20 ம் திகதி பாடநெறி இல 31ஏ இன் ஊடாக பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இணைந்துக்கொண்டார்.
பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 05 ஒக்டோபர் 1990 இல் இலங்கை கவச வாகன படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு, 2022 பெப்ரவரி 04, அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 24 ஆகஸ்ட் 2024 இல் தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுகின்றார். அவர் ஓய்வுபெறும் போது, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாகவும் இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியாகவும் பதவி வகிக்கின்றார்.
3 வது இலங்கை கவச வாகன படையணியின் படைத் தலைவர், வாழைச்சேனை பாதுகாப்பு ஒருங்கிணைப்பு தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரி, 4 வது இலங்கை கவச வாகன படையணியின் படைத் தலைவர், 4 வது இலங்கை கவச வாகன படையணியின் 'பி' பிரிவின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 4 வது இலங்கை கவச வாகன படையணியின் நிறைவேற்று அதிகாரி, 4 வது இலங்கை கவச வாகன படையணியின் 'சி’ பிரிவில் அதிகாரி கட்டளை, இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 2 (நிர்வாகம்), மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, இலங்கை கவச வாகன படையணி பயிற்சி நிலையத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர்,இராணுவ கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பொதுப் பணிநிலை அதிகாரி 2 (ஒருங்கிணைப்பு), இலங்கை பிரதமர், கௌரவ மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் கட்டளை அதிகாரி, முன்னாள் இலங்கை ஜனாதிபதியின் உதவியாளர், கௌரவ மஹிந்த ராஜபக்சவின் சிரேஷ்ட பாதுகாப்பு இணைப்பாளர், கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேணல் பொது பணி, 551 வது காலாட் பிரிகேட்டின் பதில் தளபதி, கவச வாகன பிரிகேட் தளபதி, தேசிய பாதுகாப்பு கல்லூரியின் செயலாளர், தேசிய பாதுகாப்பு கல்லூரியின் சிரேஷ்ட பணி நிலை அதிகாரி (இராணுவம்), 51 காலாட் படைப்பிரிவின் தளபதி, இராணுவத் தலைமையகத்தின் இராணுவச் செயலாளர், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதி உட்பட பல்வேறு முக்கிய நியமனங்களை அவர் தனது பணிக்காலம் முழுவதும் வகித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தில் அவர் கடமையாற்றிய காலத்தில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு சேவையை கௌரவிக்கும் வகையில் வீர விக்கிரம விபூஷணய, ரண விக்கிரம பதக்கம், மற்றும் ரண சூர பதக்கம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர் தனது இராணுவ வாழ்க்கையில் குழு கட்டளை அதிகாரிகள் பாடநெறி, அடிப்படை பாராசூட் பாடநெறி, கணினி பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணி நிலை பாடநெறி, இந்தியாவில் இளம் அதிகாரிகள் (கவசம்) பாடநெறி, செக் குடியரசில் டி-55 எஎம்2 பிரதான கவச வாகன செயல்பாடு பாடநெறி, பாகிஸ்தானில் கவச பயிற்றுவிப்பாளர் பாடநெறி, பிரான்சில் வீவீஐபீ பாதுகாப்புப் பட்டபடிப்பு, இந்தியா வீஐபீ பாதுகாப்புப் பாடநெறி, சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு புதிய சவால்கள் பாடநெறி, இந்தியாவில் சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி மற்றும் இந்தியாவில் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுப் பாடநெறி போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை பயின்றுள்ளார்.
சிரேஷ்ட அதிகாரி, இந்தியா தேவி அஹில்யா விஸ்வ வித்யாலயாவில் முதுநிலை பாதுகாப்பு நிர்வாகம் பாடநெறி மற்றும் இந்தியாவின் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் ஆய்வுகளில் முதுகலை தத்துவம் போன்ற பல உயர் கல்வி மற்றும் இராணுவம் அல்லாத பாடநெறிகளையும் பயின்றுள்ளார்.