21st August 2024 14:48:05 Hours
6 வது இலங்கை கவச வாகன படையணி படையினரால் 2024 ஆகஸ்ட் 20 அன்று திருகோணமலை, பக்மீகமயில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளிக்கு வழங்கப்பட்டது
இலங்கை இராணுவத்தின் எட்டாவது இராணுவத் தளபதியான திரு. டிவீ பெரேரா அவர்கள் அவரது தந்தை, மறைந்த ஜெனரல் தேஷ்மான்ய டென்னிஸ் பெரேரா வீஎஸ்வீ அவர்களின் நினைவாக, திட்டத்தின் வெற்றிக்கு தேவையான நிதியை வழங்கினார்.
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகளின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.