Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd August 2024 08:57:14 Hours

மேஜர் ஜெனரல் ஐஎஎன்பி பெரேரா ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு கஜபா படையணியில் பிரியாவிடை

35 ஆண்டுகால இராணுவப் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுசெல்லும் மேஜர் ஜெனரல் ஐஎஎன்பி பெரேரா ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை கௌரவிக்கும் வகையில் 20 ஆகஸ்ட் 2024 அன்று கஜபா இல்லத்தில் பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.

கஜபா படையணியின் ஸ்தாபகத் தந்தையான காலஞ்சென்ற மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் அஞ்சலி மற்றும் அணிவகுப்பு மரியாதையுடன் நிகழ்வு ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து பணியில் இருந்து ஓய்வு பெறும் அதிகாரியை கௌரவிக்கும் வகையில் அணிவகுப்பு நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் அதிகாரிகள் உணவகத்தில் பிரியாவிடை இரவு விருந்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன. இராணுவத் தளபதியும் படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவியர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.