Header

Sri Lanka Army

Defender of the Nation

21st August 2024 14:34:41 Hours

நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பளம் மற்றும் பதிவுகள் பணிப்பகத்திற்கு விஜயம்

நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இராணுவ பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2024 ஆகஸ்ட் 14 அன்று பனாகொடை சம்பளம் மற்றும் பதிவுகள் பணிப்பகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த அவரை, சம்பளம் மற்றும் பதிவுகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எம்கேஎஸ்எஸ் டி சில்வா சிரேஷ்ட அதிகாரிகளுடன் வரவேற்றார். இந்த விஜயத்தில் பணிப்பகத்தின் பங்கு, பணிகள் மற்றும் செயல்பாடுகள், ஓய்வூதிய முகாமை, வெளிநாட்டு கற்கைகள் மற்றும் கடன் செலுத்துதல்கள் தொடர்பான விரிவான விளக்கத்தை பெற்றுகொண்டார். மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் விஜயத்தின் நிறைவாக அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்தியதுடன் குழு படமும் எடுத்துகொண்டார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.