Header

Sri Lanka Army

Defender of the Nation

21st August 2024 10:43:02 Hours

மத்துகம வலயக் கல்விப் பணிமனையின் வருடாந்த வலய விளையாட்டுப் போட்டி

மத்துகம வலயக் கல்விப் பணிமனையின் வருடாந்த வலய விளையாட்டுப் போட்டியில் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இராணுவ பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந் நிகழ்வு மத்துகம சீடபிள்யூடபிள்யூ கன்னங்கரா மத்திய கல்லூரி மைதானத்தில் 2024 ஆகஸ்ட் 09 இடம் பெற்றது.

இப்போட்டியில் பல தடகள நிகழ்வுகள், இசைக்குழு கண்காட்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. பிரதம அதிதி தனது உரையில் நியாயமான விளையாட்டு மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துடன் மாணவர்களிடையே நெகிழ்ச்சி, உறுதிப்பாடு மற்றும் ஒற்றுமையை வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பின்னர், அவர் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் தனது பாராட்டுக் கருத்துக்களை பதிவிட்டார்.