Header

Sri Lanka Army

Defender of the Nation

20th August 2024 18:30:41 Hours

24 வது காலாட் படைப்பிரிவினரால் அம்பாறையில் பேஸ்போல் பயிற்சி

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசீ பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ பேஸ்போல் குழுவின் தலைவர் அவர்களால் பேஸ்போலின் அத்தியாவசிய நுட்பங்கள் மற்றும் பயிற்சி உத்திகள் தொடர்பான பயிற்சி 24 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் 2024 ஆகஸ்ட் 16 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் பேஸ்போல் பயிற்சி முகாம் நடாத்தப்பட்டது.

ஆசிய பேஸ்போல் சம்மேளனத்தின் பிரதி மத்தியஸ்த பணிப்பாளரும் ஜப்பான் - சர்வதேச அபிவிருத்தி பேஸ்போல் சம்மேளனம் தலைவருமான திரு.சுஜீவ விஜயநாயக்க அவர்கள் நிகழ்ச்சியை நடத்தினார். நிறைவு விழாவின் போது திரு.விஜயநாயக்க அவர்கள் பங்குபற்றிய பாடசாலை பயிற்றுவிப்பாளர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பேஸ்போல் உபகரணங்களை வழங்கினார்.

அம்பாறை கல்வி வலயத்தின் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இருந்து 30 இற்கும் மேற்பட்ட உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்ஆர் ஹசந்தி ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.