21st August 2024 10:42:26 Hours
திருகோணமலை ரேவதா சிறுவர் இல்லத்தின் 29 சிறுமியர் மற்றும் மூன்று பாதுகாவலர்களுக்கான மருத்துவ சிகிச்சை 2024 ஆகஸ்ட் 18 அன்று நடத்தப்பட்டது.
இந்த திட்டமானது 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 22 வது காலாட் படைப்பிரிவின் படையினர் திருகோணமலை கள வைத்தியசாலையின் உதவியுடன் இந்த சிகிச்சை பணியை முன்னெடுத்தனர். இதன்போது பங்கேற்ற அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கதாகும்.