21st August 2024 10:42:45 Hours
அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி - 57' வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 17 ஆகஸ்ட் 2024 அன்று நடைபெற்றது.
இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு மாத காலப் பாடநெறியில் மொத்தம் 80 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் பங்குபற்றினர். 11வது விஜயபாகு காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் கேஎம்பீ தில்ஷான் பாடநெறியின் சிறந்த மாணவராக அங்கீகரிக்கப்பட்டார்.
அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் டீஆர்என் ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் சான்றிதழ் வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் பிரதி பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.