19th August 2024 22:18:31 Hours
7வது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் 14 வது ஆண்டு நிறைவினை கட்டளை அதிகாரி மேஜர் எம்பீ சிங்ஹாரகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் தொடர் நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.
7வது இலங்கை இராணுவ மகளிர் படையணி படையினரால் கட்டளை அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் படையலகு அணிவகுப்பு மரியாதை வழங்கலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதைத் தொடர்ந்து, கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன், அனைத்து நிலையினருடனான மதிய உணவில் பங்கேற்றார். ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, 2024 ஜூலை 26 முதல் 31 வரை மத நிகழ்வுகள் நடத்தப்பட்டன.