18th August 2024 06:57:45 Hours
24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஎல்ஏசி பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் நிந்தவூர் கமு /கமு இமாம் கஸ்சாலி மகா வித்தியாலயத்தின் 61 மாணவர்களுக்கு 14 ஆகஸ்ட் 2024 அன்று தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களிடையே தகவல் தொடர்பு மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்தும் வகையில் மொழியில் பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை நடாத்தப்பட்டன. தமிழ் மொழியில் சரளமாகப் பேசக்கூடிய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பாடநெறயினை எளிதாக்கியதுடன், பங்கேற்பாளர்களிடையே நடைமுறை திறன்களைப் பகிர்ந்து கொள்ளும்போது மதிப்புமிக்க ஆலோசனைகளையும் வழங்கினர்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.