Header

Sri Lanka Army

Defender of the Nation

17th August 2024 07:59:11 Hours

12 வது காலாட் படைப்பிரிவினால் ஹம்பந்தோட்டை மற்றும் மொனராகலை பகுதி தரம் 5 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வினாவிடைத்தாள் வழங்கல்

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி, 12 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎஸ்பிடப்ளியூ பல்லேக்கும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு தரம் 5 புலமைப்பரிசில் மாதிரி தாள்களை வழங்கினர்.

2024 ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய திகதிளில் இரு மாவட்டங்களிலும் மொத்தம் 3,500 மாதிரித் தாள்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் திரு.பிரசாத் லொகுபாலசூரிய மற்றும் திரு.போஜய கசுன் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கினர்.

இந்நிகழ்வில் 121 மற்றும் 122 வது காலாட் பிரிகேட் தளபதிகள், அனுசரனையாளர்களான பிரசாத் லொகுபாலசூரிய, திரு.போஜய கசுன், சிரேஷ்ட அதிகாரிகள், பிராந்திய கல்வி மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.