Header

Sri Lanka Army

Defender of the Nation

17th August 2024 08:46:08 Hours

இலங்கை ரைபல் படையணி மற்றும் இராணுவ முன்னோடி படையணிகளுக்கு புதிய சின்னங்கள் அறிமுகம்

இலங்கை ரைபல் படையணி மற்றும் இராணுவ முன்னோடி படையணிகளுக்கு புதிய சின்னங்கள் அறிமுகம் செய்யும் விழா 09 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கை ரைபல் படையணியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக பிரதி தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஜி.பி சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்கள் பங்குபற்றினார்.

பிரதி தளபதியின் வருகையின் போது இலங்கை ரைபல் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் தொடர்ந்து தளபதி அந்நாளின் நினைவாக மரக்கன்றினையும் நாட்டினார். விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தளபதி ஒரு பாராட்டு குறிப்பினையும் எழுதினார்.

விழாவில், பிரதி தளபதி 22 சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு புதிய அடையாள சின்னங்களை பொருத்தினார். இலங்கை ரைபல் படையணி மற்றும் இராணுவ முன்னோடி படையணிகளின் வரலாற்றினை எடுத்துக்காட்டும் காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்பு அதிகாரி புதிய சின்னங்களை குறித்த அறிமுக உரையை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பிரதித் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.