18th August 2024 06:56:25 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக பிரதி தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஜி.பி சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்கள் 2024 ஆகஸ்ட் 08 அன்று 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 4 வது (தொ) இலங்கை போர் கருவி படையணி மற்றும் 2 (தொ) இலங்கை சிங்க படையணி ஆகியவற்றிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக பிரதி தளபதி ஒவ்வொரு படையலகுகளிலும் கட்டளை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து தளபதி மரக்கன்றினை நாட்டியதுடன் படையலகுகளை பார்வையிட்டதுடன் அதிகாரிகளுடன் சுமுகமாக கலந்துரையாடினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.